Tuesday, March 8, 2011

வைணவ பரிபாஷைகள்..!!!

வைணவ பரிபாஷைகள்

* பூஜை செய்தல் - திருவாராதனம்

* நாமம் இடுதல் - திருமண் காப்பு தரித்தல்



* இறைவன் - பெருமாள்.

 



* இறைவி - தாயார், பிராட்டி


* துளசி - திருத்துழாய்.

* ஏலக்காய் - பரிமள திரவியம்
 
* வெற்றிலைப் பாக்கு - அடைக்காய்

* நன்னீராட்டு - திருமஞ்சனம்


* பாடல் பெற்ற தலம் - மங்களா சாசனம் பெற்ற கோயில்
* பிரசாதம் படைத்தல் - அமுது பண்ணுதல்

* கருடன் - பெரிய திருவடி

* ஆஞ்சநேயர் - சிறிய திருவடி

* பாயசம் - திருகண்ணமுது


* ரஸம் - சாத்தமுது



* புளியஞ்சாதம் - புளியோதரை
* தயிர் சாதம் - ததியோதனம்



* வடை - திருப்பணியாரம்



* பரிமாறுதல் - சாதித்தல்



* உடம்பு சௌக்யமா? - திருமேனி பாங்கா?

Sri Krishnarpanam...!!!!

1 comment: